இந்த நாள் நமது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதில் பெருங்கடல்களின் முக்கியப் பங்கையும், அவை அழிவிலிருந்துத் தடுக்கப் பட வேண்டியதன் ஒரு அவசியத்தையும் நினைவூட்டுகிறது.
கடல்கள் பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% பரப்பினை ஆக்கிரமித்துள்ளன.
புவியின் காலநிலையை நன்குப் பராமரிக்கவும், வெப்பநிலையை ஒழுங்குபடுத்தவும், ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யவும் இவை இன்றியமையாதவையாகும்.
இந்த ஆண்டின் கருப்பொருள் "புவிக் கிரகப் பெருங்கடல்: ஓதங்கள் மாறுகின்றன" என்பதாகும்.