உலகப் பொம்மலாட்ட தினம் - மார்ச் 21
March 28 , 2025
5 days
45
- பண்டைய கிரேக்கத்தில் சுமார் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பொம்மலாட்டம் நடைமுறையில் உள்ளது.
- இது ஈரானியப் பொம்மலாட்ட நாடகக் கலைஞர் ஜவாத் சோல்ஃபாகாரி என்பவரால் கருத்துருவாக்கப்பட்டது.
- சர்வதேசப் பொம்மலாட்டச் சங்கம் ஆனது 1929 ஆம் ஆண்டில் பிராகா எனுமிடத்தில் நிறுவப்பட்டது.
- இந்தியாவில் பொம்மலாட்டம் சரம், நிழல், தடி மற்றும் கையுறை பொம்மலாட்டம் என நான்கு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டின் பொம்மலாட்டம் ஆனது அனைத்து வகை பாரம்பரிய இந்திய நாட்டின் பொம்மலாட்டங்களிலும் மிகப்பெரியது, கனமானது மற்றும் தெளிவான உச்சரிப்பு உடையது.
- இந்த வகைப் பொம்மலாட்டம் ஆனது தடி மற்றும் சரம் பொம்மைகளின் நுட்பங்களை ஒருங்கிணைத்த கலையாகும்.
- 2025 ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Robots, AI and the dream of the puppet?” என்பதாகும்.

Post Views:
45