TNPSC Thervupettagam

உலகப் பொருளாதார கண்ணோட்டம்

October 17 , 2019 1773 days 642 0
  • சர்வதேச நாணய நிதியமானது (International Monetary Fund - IMF) தனது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் ஒரு அறிக்கையான உலகப் பொருளாதார கண்ணோட்டம் என்ற அறிக்கையை அக்டோபர் 15 அன்று வெளியிட்டுள்ளது.
  • கடந்த ஆண்டில், உலக வளர்ச்சியானது கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

  • மேம்பட்ட பொருளாதாரங்களைப் பொறுத்தவரை, வளர்ச்சியானது 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் 1.7 சதவீத அளவில் சீராக இருக்கும்  என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 6.1 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
  • 2012 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் வர்த்தக அளவானது மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது என்று இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
  • 2012 ஆம் ஆண்டு முதல் இது 1 சதவிகிதம் குறைந்துள்ளது.
  • இதற்குக் கூறப்பட்டுள்ள காரணங்கள்: பெரு நிறுவன & சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையில் நிச்சயமற்ற தன்மை, தேவைக் குறைவு, வங்கி சாரா நிதியியல் நிறுவனங்களின் ஆரோக்கியத் தன்மை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்