உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் (WESP) என்ற ஒரு அறிக்கையானது, ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையானது, ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையினால் (DESA) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னதாகக் கணிக்கப்பட்ட ஜனவரி மாத வளர்ச்சி 4.0 சதவீதமாகும்.
ரஷ்யா-உக்ரைன் மோதல் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப்பாதித்தாலும், இந்தியா இன்னும் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகவே உள்ளது என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
2022 ஆம் ஆண்டில் இந்தியா 6.4 சதவீதம் வளர்ச்சி அடையும் என இந்த அறிக்கையில் கணிக்கப் பட்டுள்ளது.
இது 2021 ஆம் ஆண்டில் கணிக்கப்பட்ட 8.8 சதவீதத்தை விட மிகவும் மெதுவான வளர்ச்சியாகவே உள்ளது.