TNPSC Thervupettagam

உலகப் பொருளாதார மன்றத்தின் Uplink முன்னெடுப்பு

March 26 , 2025 5 days 39 0
  • உலகப் பொருளாதார மன்றத்தின் Uplink அமைப்பு ஆதரவு பெற்ற துணிகர முதலீட்டு முன்னெடுப்புகள் ஆனது கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 142,400 டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வினைத் தடுத்துள்ளன.
  • இது சுமார் 30,000க்கும் மேற்பட்ட கார்களின்/மகிழுந்துகளின் வருடாந்திர உமிழ்விற்கு இணையான அளவாகும்.
  • இந்தப் புத்தொழில் நிறுவனங்கள், அமேசான் மழைக்காடுகளின் ஐந்தில் ஒரு பங்கு பரப்பளவான 140 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு மற்றும் நீர்வாழ் பகுதிகளைப் பாதுகாத்துள்ளன.
  • 2.5 பில்லியன் லிட்டர் அபாயகரமான கழிவுநீரைச் சுத்திகரித்தல் மற்றும் 28 மில்லியன் டன் கழிவுகளைக் கண்காணித்தல் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டன.
  • இந்தியாவில், இந்திரா வாட்டர் நிறுவனமானது, கழிவுநீர்ச் சுத்திகரிப்புத் திறனை மிக நன்கு அதிகரித்து, 2024 ஆம் ஆண்டில் 1.2 பில்லியன் லிட்டர் கழிவு நீரைச் சுத்திகரித்து உள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 243 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்