2025 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்திரக் கூட்டம் ஆனது சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நாரில் நிறைவடைந்தது.
இந்த ஆண்டிற்கான இந்தக் கூட்டத்தின் கருத்துரு, "Collaboration for the Intelligent Age".
செயற்கை நுண்ணறிவு மற்றும் பசுமைத் தொழில்நுட்பம் ஆனது வாய்ப்புகள் மற்றும் சவால்கள் ஆகிய இரண்டையும் முன் வைக்கின்றன என்பதை 2025 ஆம் ஆண்டு WEF எடுத்துரைத்தது.
மகாராஷ்டிரா மொத்த முதலீட்டில் சுமார் 80% பங்கினைப் பெற்றுள்ளதுடன், இந்தியா மொத்தமாக முதலீட்டு உறுதிப்பாடுகள் மூலம் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டினைப் பெற்றுள்ளது.
தெலுங்கானா 1.79 லட்சம் கோடி முதலீட்டைப் பெற்றுள்ளது.
ஜெர்மனி நாட்டுப் பொறியாளரும் பொருளாதார நிபுணருமான கிளாஸ் ஸ்வாப், 1971 ஆம் ஆண்டில் ஐரோப்பிய மேலாண்மை மன்றத்தினை நிறுவினார் என்ற நிலையில் இது 1987 ஆம் ஆண்டில் WEF மன்றமாக மாற்றப்பட்டது.
2015 ஆம் ஆண்டில், WEF அமைப்பானது அதிகாரப்பூர்வமாக ஒரு சர்வதேச அமைப்பாக அங்கீகரிக்கப் பட்டதோடு இதன் தலைமையகமானது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது.
WEF வருடாந்திரக் கூட்டம் ஆனது சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றது.