TNPSC Thervupettagam

உலகப் பொருளாதார வாய்ப்புகள் (GEP) அறிக்கை 2025

February 19 , 2025 4 days 78 0
  • உலக வங்கியானது 2025 ஆம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார வாய்ப்புகள் (GEP) அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இது உலக வங்கி குழுமத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் முதன்மையான அறிக்கையாகும்.
  • இது உலகப் பொருளாதாரத்தின் போக்குகள் மற்றும் கணிப்புகளை ஆராய்கிறது.
  • உலகப் பொருளாதாரம் ஆனது, 2024 ஆம் ஆண்டில் இருந்த அதே வேகத்தில் வளர்ச்சி அடைந்தால், 2025 மற்றும் 2026 ஆகிய இரு ஆண்டுகளிலும் 2.7% விரிவடையும்.
  • இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% பங்கினை வழங்கி வந்த வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் ஆனது தற்போது சுமார் 45% பங்களிக்கிறது.
  • இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று பெரிய வளர்ந்து வரும் நாடுகள் ஒரு கூட்டாக, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஒரு வருடாந்திர உலகளாவிய வளர்ச்சியில் தோராயமாக 60% பங்களித்துள்ளன.
  • 2026 மற்றும் 2027 ஆம் நிதியாண்டுகளில் (வளர்ச்சி விகிதம் - 6.7%) இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்