TNPSC Thervupettagam

உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் 2020

October 20 , 2020 1500 days 745 0
  • சர்வதேச நாணய நிதியமானது (IMF - International Monetary Fund) சமீபத்தில் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் 2020 என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானதுநீண்ட மற்றும் கடினமான ஒரு ஏற்றம்என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இது ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் வெளியிடப் படுகின்றது.

சிறப்பம்சங்கள்

  • இந்த அறிக்கையானது இந்தியாவின் பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டில் 10.3% ஆகக் குறையும் என்று கணித்துள்ளது.
  • இந்த வளர்ச்சியானது பிரிக்ஸ் நாடுகளிடையே மிகக் குறைவானதாக இருக்கும்.
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் வருமான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product - GDP) அடிப்படையில் வங்க தேசத்திற்கு அடுத்த  நிலையில் சரிய இருக்கின்றது.
  • வங்க தேசமானது டாலர் அடிப்படையில் தனிநபர் வருமான GDPயில்  இந்தியாவை முந்த இருக்கின்றது. இது 2020 ஆம் ஆண்டில் 4% என்ற அளவில் $1,888 ஆக உயர இருக்கின்றது.
  • இந்தியாவின் தனிநபர் வருமான GDP ஆனது 2020 ஆம் ஆண்டில் 10.5% என்ற அளவில் $1,877 ஆகக் குறைய இருக்கின்றது.
  • பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அடுத்து குறைந்த தனி நபர் வருமான GDPயைப் பதிவு செய்து இந்தியாவானது தெற்கு ஆசியாவில் மூன்றாவது ஏழ்மையான நாடாக உள்ளது.
  • வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய இதர அனைத்து தெற்கு ஆசிய நாடுகளும் இந்தியாவை முந்தும் நிலையில் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்