சர்வதேச நாணய நிதியமானது (IMF - International Monetary Fund) இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 1.9% சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
மேலும் 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது 7.4 சதவீதமாக மீளும் என்றும் IMF கூறியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரமானது 3 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
இது 1929-1932 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மந்த நிலைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய வீழ்ச்சியைக் குறிக்கின்றது.
இந்தியா, சீனா, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் மட்டும் வளர்ச்சியைக் காணும் என்று IMF கணித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய இதர மிகப்பெரிய பொருளாதார நாடுகள் குறைவான வளர்ச்சி விகிதத்தைச் சந்திக்க இருக்கின்றன.