TNPSC Thervupettagam

உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் 2021

February 4 , 2021 1264 days 606 0
  • சர்வதேச நாணய நிதியமானது ”உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் 2021” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் பொருளாதாரமானது 2021 ஆம் ஆண்டில் 11.5% என்ற அளவிற்கு வளர்ச்சியடைய இருக்கின்றது.
  • இதற்கு முன்பு இது 8.8% வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சியானது 6.8% ஆக இருக்கும் என்று கணிக்கப் பட்டு உள்ளது.
  • உலகின் பொருளாதார வளர்ச்சியானது 2022 ஆம் ஆண்டில் 4.2% ஆக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்யும் ஒரே நாடாக இந்தியா உருவெடுக்க இருக்கின்றது.
  • இந்தியாவானது உலகில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை மீண்டும் பிடிக்கவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்