TNPSC Thervupettagam

உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் 2024

October 28 , 2024 33 days 103 0
  • சர்வதேச நாணய நிதியமானது சமீபத்திய உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • உலகின் மிகப்பெரியப் பொருளாதாரமான அமெரிக்கப் பொருளாதாரம் ஆனது இந்த ஆண்டு 2.8 சதவிகிதம் விரிவடையும் என்று IMF கணித்துள்ளது.
  • இது 2023 ஆம் ஆண்டில் பதிவான 2.9 சதவீதத்திலிருந்து சற்று குறைந்துள்ளது ஆனால் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அது கணித்த 2.6 சதவீதத்தினை விட இது அதிகம் ஆகும்.
  • யூரோ பண மதிப்பினைப் பகிர்ந்து கொள்ளும் 20 ஐரோப்பிய நாடுகள் கூட்டாக இந்த ஆண்டு 0.8 சதவீத வளர்ச்சியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஜெர்மனி நாட்டின் பொருளாதாரமானது, இந்த ஆண்டு வளர்ச்சி அடையாது என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்த உலகளாவியப் பணவீக்கம் ஆனது இந்த ஆண்டு 5.8 சதவீதமாகவும், 2025 ஆம் ஆண்டில் 4.3 சதவீதமாகவும் குறையும் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • இந்தியாவின் பொருளாதாரம் ஆனது இந்த ஆண்டு சுமார் 7 சதவீதமாகவும், 2025 ஆம் ஆண்டில் 6.5 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்