கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சியானது 2020 ஆம் ஆண்டில் 1 சதவிகிதம் அளவிற்குக் குறைய இருக்கின்றது.
இந்த ஆய்வானது ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையினால் மேற்கொள்ளப் பட்டுள்ளது (DESA/ Department of Economic and Social Affairs).
இது UNDESAவின் உலகப் பொருளாதார முன்கணிப்பு மாதிரியின் ஒரு பகுதியாகும்.
கோவிட் – 19 நோய்த் தொற்று ஏற்படுவதற்கு முன்பு, உலகப் பொருளாதார நிலைமைகள் மற்றும் வாய்ப்புகள் – 2020 என்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு, 2020 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரமானது 2.5 சதவிகிதம் என்ற மிதமான அளவில் வளரும் என்று கணிக்கப் பட்டதாக இந்த ஆய்வு கூறுகின்றது.