தொழில்நுட்பம் மற்றும் வடிவத்திற்கான சிங்கப்பூர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேலாண்மை வளர்ச்சி மையம் என்ற நிறுவனமானது 2020 ஆம் ஆண்டின் உலகப் பொலிவுறு நகரக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
இந்தக் குறியீட்டில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் குறியீட்டில் ஹெல்சிங்கி மற்றும் ஜுரிச் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
ஹைதராபாத் ஆனது 85வது இடத்தைப் பிடித்த (2019 ஆம் ஆண்டில் 67வது இடம்) முன்னிலையில் உள்ள ஒரு இந்திய நகரமாகும்.
இதர 3 இந்திய நகரங்களான புது தில்லி (68லிருந்து 86வது இடம்), மும்பை (78லிருந்து 93வது இடம்), பெங்களுரு (79லிருந்து 95வது இடம்) ஆகியவை இந்தத் தரவரிசையில் குறிப்பிடத்தக்க அளவில் பின்தங்கியுள்ளன.