TNPSC Thervupettagam

உலகப் போதைப்பொருட்கள் அறிக்கை 2023

June 30 , 2023 385 days 249 0
  • 2023 ஆம் ஆண்டு உலக மருந்து அறிக்கையானது, ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தினால் (UNODC) வெளியிடப் பட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் உலகளவில் போதைப் பொருட்களை உட்கொள்ளச் செய்பவர்களின் எண்ணிக்கை 13.2 மில்லியனாக இருந்தது.
  • இது முந்தைய ஆண்டில் மதிப்பிடப்பட்டதை விட சுமார் 18 சதவீதம் அதிகமாகும்.
  • உலகளவில், 2021 ஆம் ஆண்டில் 296 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
  • இது கடந்தப் பத்தாண்டுகளில் பதிவான அளவை விட 23 சதவீதம் அதிகமாகும்.
  • போதைப் பொருள் பயன்பாடு சார்ந்தப் பல்வேறு குறைபாடுகளால் பாதிக்கப் பட்ட நபர்களின் எண்ணிக்கையானது, 39.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.
  • இது கடந்த 10 ஆண்டுகளில் பதிவான அளவை விட 45 சதவீதம் அதிகமாகும்.
  • உலகளவில் கைப்பற்றப்பட்ட மொத்த மெத்தம்பேட்டமைனில் கிட்டத்தட்ட 90 சதவீதம் ஆனது, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் வட அமெரிக்கா ஆகிய இரண்டு பிராந்தியங்களில் இருந்தே கைப்பற்றப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்