2022 ஆம் ஆண்டிற்கான உலகப் போதைப்பொருள் அறிக்கை ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தினால் சமீபத்தில் வெளியிடப் பட்டது.
கஞ்சாவைச் சட்டப்பூர்வமாக்குவது என்பது அதன் தினசரிப் பயன்பாடு மற்றும் அது தொடர்பான உடல்நலப் பாதிப்புகளை அதிகரித்துள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது.
ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில், 35 வயதிற்கு உட்பட்ட நபர்களில் பெரும்பாலானோர் போதைப் பொருள் பயன்பாட்டுக் கோளாறுகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகளவில் 2 மில்லியன் அளவில் போதை மருந்துகளை ஊசி மூலம் செலுத்திக் கொள்கின்றனர்.
இந்த எண்ணிக்கையில் பாதி பேர் ஹெபடைடிஸ் சி வகையினாலும், 1.4 மில்லியன் பேர் எச்.ஐ.வி தொற்றினாலும் மற்றும் 1.2 மில்லியன் பேர் எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ் சி ஆகிய இரண்டினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் 11 சதவீதமாக இருந்த கோகோயின் உற்பத்தியானது 2020 ஆம் ஆண்டில் 1,982 டன்களாக அதிகரித்துள்ளது.
2020-2021 ஆம் ஆண்டில் உலகளாவிய ஓபியம் உற்பத்தியானது ஏழு சதவீதம் அதிகரித்துள்ளது.
முக்கியமாக ஆப்கானிஸ்தானில் அதன் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக இந்த அதிகரிப்பானது ஏற்பட்டுள்ளது.