உலகளவிலான உவர்தன்மையினால் பாதிக்கப்பட்ட மண்ணின் நிலை 2024
December 22 , 2024 31 days 116 0
2024 ஆம் ஆண்டு சர்வதேச மண் மற்றும் நீர் மன்றம் ஆனது தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்றது.
உணவு மற்றும் வேளாண் அமைப்பால் இதற்கு உலகளவிலான உவர்தன்மையினால் பாதிக்கப் பட்ட மண்ணின் நிலை என்ற தலைப்பு வழங்கப் பட்டது.
சுமார் 1.4 பில்லியன் ஹெக்டேர் பரப்பிலான நிலம் அல்லது உலக நிலப்பரப்பில் 10.7 சதவீத நிலப்பரப்பானது உவர் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது.
உவர்தன்மையினால் பாதிக்கப்பட்ட மண் ஆனது மிகப் பெரும்பாலான தாவரங்களின் வளர்ச்சியை மோசமாகப் பாதிக்கின்ற, கரையக்கூடிய உப்புகள் (உவர் தன்மை ஏறிய மண்) அதிக அளவு கொண்ட மண்ணின் ஒரு குறிப்பிட்ட தொகுதியாகும்.
தற்போது வரை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, அமெரிக்கா, ஈரான், சூடான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய பத்து நாடுகள் உலகின் உவர்தன்மையினால் பாதிக்கப்பட்ட மண்ணில் சுமார் 70 சதவீதப் பங்கினை கொண்டுள்ளன.
உவர்தன்மையினால் பாதிக்கப்பட்ட மண்ணைக் கொண்ட 3 மிகவும் பெரிய பகுதிகள் ஆஸ்திரேலியா (357 மில்லியன் ஹெக்டேர் அல்லது mha), அர்ஜென்டினா (153 mha) மற்றும் கஜகஸ்தான் (94 mha) ஆகிய நாடுகளில் காணப்பட்டன.
உவர்தன்மை மற்றும் களர் மண் (சோடியம்) தன்மை ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப் பட்ட 3 நாடுகள் ஓமன் (நாட்டின் நிலப்பரப்பில் 93.5 சதவீதம்), உஸ்பெகிஸ்தான் (92.9 சதவீதம்) மற்றும் ஜோர்டான் (90.6 சதவீதம்) ஆகியனவாகும்.
இந்தியா சுமார் 6.72 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் அல்லது அதன் மொத்தப் புவியியல் பகுதியில் 2.1 சதவீதம் உவர்த் தன்மையினால் பாதிக்கப்பட்டப் பகுதியைக் கொண்து இருந்தது.
அதில், சுமார் 2.95 மில்லியன் ஹெக்டேர் உவர் தன்மை மிக்க நிலமாகவும், மீதமுள்ள 3.77 மில்லியன் ஹெக்டேர் களர் நிலமாகவும் இருந்தது.
குஜராத் (2.23 mha), உத்தரப் பிரதேசம் (1.37 mha), மகாராஷ்டிரா (0.61 mha), மேற்கு வங்காளம் (0.44 mha) மற்றும் இராஜஸ்தான் (0.38 mha) ஆகியவை நாட்டின் உவர் தன்மையினால் பாதிக்கப்பட்ட மண்ணில் சுமார் 75% பங்கினைக் கொண்டுள்ளன.