ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது (UNEP), உலகளவிலான முக்கியச் சதுப்பு நில வரைபடத்தினை வெளியிட்டுள்ளது.
இந்த வரைபடமானது, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பிற்கான சில முதலீடுகளுடன், சதுப்பு நிலங்களின் பாதுகாப்பையும் மறுசீரமைப்பையும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்திற்கான ஆதாரங்களை வழங்குகிறது.
உலகளவில் 488 மில்லியன் ஹெக்டேர் பரப்பிலான சதுப்பு நிலப்பரப்பு மற்றும் அதில் 12% பரப்பு ஆனது அதிகளவில் சீர்குலைந்துள்ளது.
பூமியின் நிலப்பரப்பில் 3-4% ஆக மட்டுமே உள்ள சதுப்பு நிலமானது என்பதோடு அது உலகின் மூன்றில் ஒரு பங்கு மண் சார்ந்த கார்பனையும் கொண்டுள்ளது.
இது உலக அளவில் காடுகளில் காணப்படும் கார்பன் அளவை விட இருமடங்காகும்.
சதுப்பு நிலங்கள் ஆனது, குறைந்த பட்சம் 40 செ.மீ. அளவிலான கரிமப் பொருட்களுடன் முதன்மையாக கார்பன் (கரி) நிறைந்த கரிம மண்ணால் ஆனது.
சதுப்பு நிலங்கள் ஆனது, மனித செயல்பாடு காரணமாக ஆண்டிற்கு 1,941 மெட்ரிக் டன் அளவிலான கார்பன் டை ஆக்சைடிற்கு சமமான வாயுவினை (CO₂e) வெளியிடுகிறது.
சுமார் 0.2% ஆக மதிப்பிடப்பட்டுள்ள இந்தியாவில் இருக்கும் சதுப்பு நிலங்கள் ஆனது, பொதுவாக கிழக்கு இமயமலை, மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் வட கிழக்கு இந்தியப் பகுதியில் காணப்படுகின்றன.
காங்கோ நதிப் படுகையில், மிகப் பெரிய அறியப்பட்ட வெப்பமண்டலச் சதுப்பு நிலம் காணப்படுகிறது.