TNPSC Thervupettagam

உலகளவில் கரிசல் மண்ணின் நிலை

December 13 , 2022 718 days 521 0
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது "உலகளவில் கரிசல் மண்ணின் நிலை" என்ற தலைப்பில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • கரிமப் பொருட்கள் நிறைந்த மண் அடுக்கினைக் கொண்ட தடிமனான, கருமை நிற மண் கரிசல் மண் என்று வகைப்படுத்தப் படுகிறது.
  • அதிக ஈரப்பதத்தைச் சேமிக்கும் திறன் கொண்டதால் இவை மிகவும் வளமானவை மற்றும் அதிக வேளாண் விளைச்சலை வழங்கும் திறன் கொண்டவையாகும்.
  • உலகளவில் உள்ள மண் வகைகளில் 5.6 சதவீதம் கரிசல் மண் ஆகும் என்பதோடு, இவை உலகின் கரிம கார்பன் (SOC) இருப்புகளில் 8.2 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
  • உலகின் பெரும்பாலான இடங்களில் காணப்படும் கரிசல் மண்ணில் உள்ள கரிம கார்பன் (SOC) இருப்புகளில் குறைந்தது 50 சதவீதம் குறைந்து வருவதால், உலக நாடுகளின் மக்கள்தொகைக்கு பெருமளவில் உணவளிக்கும் கரிசல் மண் ஆனது அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது.
  • உலக மக்கள்தொகையில் சுமார் 2.86 சதவீதம் பேர் கரிசல் மண் பகுதிகளில் வாழ்கின்றனர்.
  • இது 17.36 சதவீத விளைநிலத்திற்கும், 8.05 சதவீத உலகளாவிய கரிம கார்பன் (SOC) இருப்புகளுக்கும், விளை நிலங்களின் 30.06 சதவீத கரிம கார்பன் (SOC) இருப்புகளுக்கும் மூல ஆதாரமாக விளங்குகிறது.
  • உலகில் உள்ள மண் வகைகளில் ஒரு சிறிய அளவில் மட்டுமே இது காணப்பட்டாலும், உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கரிசல் மண் பெரும் பங்கு வகிக்கிறது.
  • மொத்த விளைநிலத்தில் 70% கரிசல் மண், ஐரோப்பா மற்றும் யூரேசியா பகுதிகளில் காணப் படுகிறது.
  • வட அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா & கரீபியன் மற்றும் ஆசியா ஆகிய பகுதிகளில் தலா 10 சதவீதம் கரிசல் மண் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்