சர்வதேச ஒற்றுமை மற்றும் அகதிகள் பாதுகாப்புக்கான ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் வகையில் அகதிகள் மீதான உலகளாவிய உடன்படிக்கைக்கு ஐ.நாவின் உறுப்பு நாடுகள் ஒருமனதாக வாக்களித்துள்ளன.
இந்த உலகளாவிய உடன்படிக்கையானது 193 உறுப்பு நாடுகளில் 181 நாடுகளின் வாக்குகளை சாதகமானதாக பெற்றது.
அமெரிக்கா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் மட்டுமே இந்த உலகளாவிய அகதிகள் மீதான உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளாகும்.
டொமினியன் குடியரசு, எரித்ரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.