TNPSC Thervupettagam

உலகளாவிய அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம்

November 8 , 2023 383 days 277 0
  • உலகளாவிய அணு ஆயுத சோதனை தடைக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்ததை ரத்து செய்யும் மசோதாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.
  • இது CTBT எனப்படும் விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் ஒப்புதலை ரத்து செய்கிறது.
  • அணு ஆயுத சோதனை தடையில் கையெழுத்திட்ட, ஆனால் ஒப்புதல் அளிக்காத அமெரிக்காவின் இது தொடர்பான நிலைப்பாட்டையே இதுவும் “பிரதிபலிக்கிறது”.
  • 1996 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட CTBT ஆனது, உலகில் மேற்கொள்ளப்படும் அனைத்து அணு ஆயுத வெடிப்பு சோதனைகளையும் தடை செய்கிறது, ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
  • அமெரிக்காவோடு சேர்த்து, சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, இஸ்ரேல், ஈரான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளும் இந்த ஒப்பந்தத்தினை இன்னும் அங்கீகரிக்க வில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்