உலகளாவிய அந்நிய நேரடி முதலீடானது (Foreign Direct Investment - FDI) 2020 ஆம் ஆண்டில் 38% வரை குறைந்துள்ளது.
இது 15 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சரிவாகும் (2005 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட சரிவிலேயே மிகவும் சரிவானது).
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பினால் (OECD – Organization for Economic Cooperationa and Development) வெளியிடப்பட்ட புதிய தரவுத் தொகுப்பின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் 64 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் அந்நிய நேரடி முதலீட்டை அதிகளவில் பெறும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது.
அமெரிக்காவை (177 பில்லியன் அமெரிக்க டாலர்) விஞ்சிய சீன நாடானது (212 பில்லியன் அமெரிக்க டாலர்) அந்நிய நேரடி முதலீட்டை அதிகளவில் பெறும் பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.