TNPSC Thervupettagam

உலகளாவிய அபாய அறிக்கை - 2019

January 21 , 2019 2137 days 680 0
  • உலக பொருளாதார மன்றத்தால் 2019 ஆண்டிற்கான உலகளாவிய அபாய அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கையானது ஆண்டுதோறும் உலகளாவிய நிலப்பரப்புகளில் நிகழும் அபாயங்களில் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கின்றது. மேலும் உலகளாவிய பேரழிவு அபாயங்களை அது கண்டறிகின்றது.
  • சமீபத்திய அறிக்கையின்படி முன்னணி 5 அபாயங்களாவன
    • தீவிர வானிலை நிகழ்வுகள்
    • காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைத்தல் மற்றும் அதனை ஏற்றுக் கொள்ளுதலில் தோல்வி
    • மிகப்பெரிய இயற்கை பேரழிவுகள்
    • பெரிய அளவிலான தரவு மோசடி / திருட்டு
    • மிகப்பெரிய அளவிலான இணையவழி தாக்குதல்கள்
  • உலகளாவிய அபாய நிலப்பரப்புகளில் தாக்கம் மற்றும் நிகழும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக சுற்றுச்சூழல் அபாயங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
  • உலகளாவிய அபாயங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. ஆனால் அவைகளுக்குப் பதிலளிக்கும் திறன் குறைந்துக் கொண்டே வருகின்றன.
  • புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதார காரணிகளான நிலையற்ற தன்மை மற்றும் தேசியவாதம் ஆகியவை அபாயங்களை ஊக்குவிக்கின்றன.
  • புவிசார் அரசியல் மற்றும் இணையவழி அச்சுறுத்தல்கள் ஆகியவை குறுகிய கால அச்சுறுத்தல்கள் ஆகும்.
  • உள்கட்டமைப்பு மூலதனத்தில் குறிப்பிடத்தக்க அளவில் நிதி இடைவெளி   ($ 8 ட்ரில்லியன்) உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்