TNPSC Thervupettagam

உலகளாவிய அமைதிக் குறியீடு 2024

June 17 , 2024 159 days 516 0
  • பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான கல்வி நிறுவனம் ஆனது அதன் வருடாந்திர உலகளாவிய அமைதிக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
  • இது உலகெங்கிலும் உள்ள 163 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் நிலவும் அமைதி நிலையினை மதிப்பிடுகிறது.
  • ஒட்டு மொத்தத்தில், உலக நாடுகளில் நிலவும் அமைதி நிலை இந்த ஆண்டு 0.56% குறைந்துள்ளது.
  • ஒட்டு மொத்தத்தில், கடந்த ஆண்டு மோதல் காரணமாக சுமார் 162,000 பேர் உயிர் இழந்துள்ளனர் என்ற நிலையில் இது கடந்த 30 ஆண்டுகளில் பதிவான இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பினைக் குறிக்கிறது.
  • வன்முறையின் காரணமாக ஏற்பட்ட உலகளாவியப் பொருளாதார தாக்கம் ஆனது கடந்த ஆண்டு 19.1 டிரில்லியன் டாலராக அதிகரித்தது என்ற நிலையில் இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.5 சதவீதமாகும்.
  • ஐஸ்லாந்து நாடானது மிகவும் அமைதியான நாடாக இப்பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது என்பதோடு அது 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இந்த நிலையினை வகித்து வருகிறது.
  • அதைத் தொடர்ந்து அயர்லாந்து, ஆஸ்திரியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
  • ஆப்கானிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மிகவும் அமைதி குறைந்த நாடாக ஏமன் இடம் பிடித்துள்ளது.
  • அதைத் தொடர்ந்து சூடான், தெற்கு சூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
  • இதில் இந்தியா 5 இடங்கள் முன்னேறி 116வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்