TNPSC Thervupettagam

உலகளாவிய அறிவுசார் சொத்துப் பதிவு

November 29 , 2022 598 days 308 0
  • உலக அறிவுசார் சொத்து அமைப்பின் உலக அறிவுசார் சொத்து குறிகாட்டிகள் (WIPI) என்ற அறிக்கையானது, 2021 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள புதுமைப் படைப்பாளர்கள் 3.4 மில்லியன் காப்புரிமை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்து உள்ளனர் என்று குறிப்பிடுகிறது.
  • இது முந்தைய ஆண்டை விட 3.6 சதவீதம் அதிகமாக உள்ள நிலையில், உலகளவில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களில் 67.6 சதவீத விண்ணப்பங்கள் ஆசியாவில் உள்ள அலுவலகங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  • 2021 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதிவுகள் இந்தியா, சீனா மற்றும் தென் கொரியா ஆகிய ஆசிய நாடுகளில் தான் அதிகம் பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • இந்தியா (+5.5 சதவீதம்), சீனா (+5.5 சதவீதம்) மற்றும் கொரியக் குடியரசு (+2.5 சதவீதம்) ஆகியவற்றில் உள்நாட்டுக் காப்புரிமைத் தாக்கல்கள் அதிகளவில் பதிவாகியுள்ளது.
  • அமெரிக்கா (-1.2 சதவீதம்), ஜப்பான் (-1.7 சதவீதம்) மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் (-3.9 சதவீதம்) உள்நாட்டுக் காப்புரிமைச் செயல்பாடுகள் 2021 ஆம் ஆண்டில் குறைந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்