TNPSC Thervupettagam

உலகளாவிய அளவில் பள்ளிகளில் உணவளித்தல் நிலை – 2020

March 3 , 2021 1363 days 700 0
  • ஐக்கிய நாடுகள் உணவுப் பாதுகாப்புத் திட்டமானது (WFP - World Food Programmes) “உலகளாவிய அளவில் பள்ளிகளில் உணவளித்தல் நிலை” என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இது 2020 ஆம் ஆண்டில் உலகளாவிஅளவில் பள்ளிகளில் உணவளித்தல் நிலை குறித்த ஆய்வை அளிக்கின்றது.
  • இது முதன்முதலில் 2013 ஆம் ஆண்டில் WFP அமைப்பால் வெளியிடப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டுப் பதிப்பானது 2013 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மாற்றம் அடைந்துள்ள நிலையை ஆய்வு செய்கின்றது.
  • இது கல்வி மற்றும் ஆரோக்கிய நலப் பலன் அளிக்கும் திட்டங்களின் ஆதாரம் மற்றும் புரிதலில் உள்ள மேம்பாடுகள் குறித்த திருத்தப்பட்ட தகவல்களை அளிக்கின்றது.
  • நோய்த் தொற்று மிகக் கடுமையாக இருந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 199 நாடுகள் தங்களது பள்ளிகளை மூடி விட்டன.
  • இதன் காரணமாக ஏறத்தாழ 370 மில்லியன் குழந்தைகள் பள்ளியில் வழங்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவின்றித் தவித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்