உலகளாவிய ஆற்றல் மாற்றக் குறியீடு (GET Index - Global Energy Transition Index)
May 16 , 2020
1658 days
745
- உலகப் பொருளாதார மன்றமானது (WEF - World Economic Forum) “WEF வளரும் திறன்மிகு ஆற்றல் மாற்றம் 2020” என்ற பெயருடன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- இந்த அறிக்கையின்படி, 75% நாடுகள் தங்களது சுற்றுச்சூழல் நிலைப்புத் தன்மையை மேம்படுத்தியுள்ளன.
- இந்தியா இந்தக் குறியீட்டில் 74வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- இந்தக் குறியீட்டில் சுவீடன் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
- இதற்கு அடுத்து சுவிட்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
- இதன் முதல் 10 இடங்களில் G20 அமைப்பைச் சேர்ந்த பிரான்சு (8வது இடம்) மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் (7வது இடம்) ஆகிய நாடுகள் மட்டுமே இடம் பிடித்துள்ளன.
- முதன்முறையாக, அமெரிக்கா, முதல் 25 இடங்களில் இடம் பெறவில்லை.
- இந்தத் தரவரிசையின் படி, உலகில் ஆற்றல் தேவையுள்ள வளரும் நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உள்ளன.
Post Views:
745