TNPSC Thervupettagam

உலகளாவிய இணைப்பு அமைப்பு

April 19 , 2018 2411 days 770 0
  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமானது (Ministry of Commerce and Industry) FIEO உலகளாவிய இணைப்பு அமைப்பு  (FIEO Global Linker) எனும் டிஜிட்டல் இணைய மேடையைத் தொடங்கியுள்ளது.
  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை (MSME) ஏற்றுமதியாளர்கள் தங்களுடைய வணிகத்தொழிலை டிஜிட்டல்மயப்படுத்தவும், வளரும் வணிகத் தொழில்களின் உலக சமுதாயத்தில் இணையவும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை ஏற்றுமதியாளர்களுக்காக FIEO (Federation of Indian Export Organisations-FIEO) உலகளாவிய  இணைப்பு அமைப்பு   தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பினால் இந்த (Federation of Indian Export Organisations-FIEO) FIEO உலக இணைப்பு அமைப்பு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • FIEO உலகளாவிய இணைப்பு அமைப்பானது,
    • மேம்படுத்தப்பட்ட சங்கிலி மேலாண்மை (chain management) மற்றும் நேரடி விற்பனைக்குத் தடையற்ற மின்-வர்த்தகத்தை உருவாக்குவதற்கு உதவிபுரியும்.
    • MSME ஏற்றுமதியாளர்களுக்கு இன்றைய தேதி வரையிலான வணிகத் தொழில் சார்ந்த தகவல்களை வழங்கும்.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு

  • இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பானது இந்தியாவின்  உச்சநிலை ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனமாகும்.
  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், தனியார் வர்த்தகம் மற்றும் தொழில்துறைகள் ஆகியவற்றினால் 1965 ஆம் ஆண்டு இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு   தோற்றுவிக்கப்பட்டது.
  • சர்வதேச வர்த்தக சந்தைகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், இந்திய தொழில்முனைவோர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு உதவி புரிவதற்கும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு    பொறுப்புடையதாகும்.
  • இதனுடய தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்