இது அசெஞ்சர் நிறுவனத்துடன் இணைந்து உலகப் பொருளாதார மன்றத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
இதன்படி வளர்ந்து வரும் 8% திறன் இடைவெளி காரணமாக, மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள் பாதுகாப்புத் தேவைகளை திறம்பட நிவர்த்தி செய்ய முடியாமல் போகிறது.
2.8 மில்லியன் முதல் 4.8 மில்லியன் இணைய வெளிப் பாதுகாப்பு நிபுணர்களுக்கான பற்றாக்குறை உள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 49% போதுமான இணைய வெளிப் பாதுகாப்பு திறன் இல்லாத நிலையில் உள்ளன.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் காணப்படும் சுமார் 15 சதவீதத்துடன் ஒப்பிடச் செய்யும் போது, இலத்தீன் அமெரிக்காவில் சுமார் 42% மற்றும் ஆப்பிரிக்காவில் 36% பேர் இணைய வெளிப் பாதுகாப்பு தயார்நிலையில் நம்பிக்கை இல்லாமல் உள்ளன.