TNPSC Thervupettagam

உலகளாவிய இணையச் சங்கேதப் பண ஏற்புக் குறியீடு 2022

September 19 , 2022 670 days 433 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய இணையச் சங்கேதப் பண ஏற்புக் குறியீட்டினை செயின் அனாலிசிஸ் என்ற அமைப்பு வெளியிட்டது.
  • இணையச் சங்கேதப் பண ஏற்பில் வியட்நாம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
  • இதில் கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் கீழிறங்கி இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
  • “தனது 20 முன்னணி நாடுகளில், 10 நாடுகள் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள்" என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • இந்த ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த 30% அளவிலான இணையச் சங்கேதப் பண வரியைத் தவிர, இணையச் சங்கேதப் பணம் சார்ந்தத் தொழிலுக்கான சரியான ஒழுங்குமுறைக் கட்டமைப்பை இந்திய அரசாங்கம் இன்னும் அமைக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்