2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய இணையச் சங்கேதப் பண ஏற்புக் குறியீட்டினை செயின் அனாலிசிஸ் என்ற அமைப்பு வெளியிட்டது.
இணையச் சங்கேதப் பண ஏற்பில் வியட்நாம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
இதில் கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் கீழிறங்கி இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
“தனது 20 முன்னணி நாடுகளில், 10 நாடுகள் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள்" என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த 30% அளவிலான இணையச் சங்கேதப் பண வரியைத் தவிர, இணையச் சங்கேதப் பணம் சார்ந்தத் தொழிலுக்கான சரியான ஒழுங்குமுறைக் கட்டமைப்பை இந்திய அரசாங்கம் இன்னும் அமைக்கவில்லை.