TNPSC Thervupettagam

உலகளாவிய இயற்கை வளங்காப்புக் குறியீடு (NCI) 2024

October 30 , 2024 31 days 108 0
  • இந்த அறிக்கையானது, நில மேலாண்மை, பல்லுயிர்ப் பெருக்கம் மீதான பல்வேறு அச்சுறுத்தல்கள், திறன் மற்றும் ஆளுகை மற்றும் எதிர்கால போக்குகள் ஆகிய நான்கு குறிப்பான்களைப் பயன்படுத்தி வளங்காப்பு முயற்சிகளை மதிப்பீடு செய்கிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய இயற்கை வளங்காப்புக் குறியீட்டில் இந்தியா 176வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இதில் 180 நாடுகளின் தரவரிசையில் கிரிபாட்டி (180), துருக்கி (179), ஈராக் (178), மற்றும் மைக்ரோனேஷியா (177) ஆகியவற்றுடன் ஐந்து மோசமான செயல்திறன் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம் உள்ளது.
  • இந்தக் குறியீடு ஆனது இந்தியாவில் பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டை நன்கு வெளிப்படுத்துகிறது என்பதோடு மண் மாசுபாட்டிற்கு எதிரான நடவடிக்கை குறித்தும் எச்சரிக்கிறது.
  • 15வது இடத்தினைப் பெற்று முதல் 50 இடங்களில் உள்ள இடம் பெற்ற ஒரே தெற்காசிய நாடாக பூடான் திகழ்கிறது.
  • இதில் நேபாளம் 60வது இடத்தில் உள்ளது என்பதோடு இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகியவை முறையே 90 மற்றும் 151வது இடங்களைப் பெற்று இந்தியாவை விட செயல் திறனில் முன்னணியில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்