கலாச்சார அமைச்சகம் ஆனது, "உலகளாவிய ஈடுபாடு திட்டத்தினை" செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவின் மிக வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தினை மேம்படுத்துவதையும், உலகளாவிய அரங்கில் இந்தியாவின் மதிப்பினை ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மக்கள் தொடர்பு மற்றும் இருதரப்பு கலாச்சாரத் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக வேண்டி வெளிநாடுகளில் “இந்தியத் திருவிழா -Festival of India (FoI)” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2013-14 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரையில் பல்வேறு நாடுகளில் மொத்தம் 62 FoI நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.