சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமானது (International Food Policy Research Institute-IFPRI) சமீபத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய உணவுக் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
IFPRI-இன் இந்த முதன்மை அறிக்கையானது 2018 ஆம் ஆண்டிற்கான உணவுக் கொள்கையில் உள்ள முக்கிய சிக்கல்கள், மேம்பாடுகள் மற்றும் முடிவுகள் ஆகியவற்றை மறு ஆய்வு செய்கிறது. மேலும் 2019 ஆம் ஆண்டிற்கான சவால்களையும் வாய்ப்புகளையும் கவனத்தில் கொள்கிறது.
முக்கிய கண்டுபிடிப்புகள்
உலகின் மொத்த மக்கள் தொகையில் 45.3% மக்கள் கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்கள்.
உலக மக்கள் தொகையில் குறைந்த பட்சமாக 70% பேர் மிகவும் வறுமையில் உள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள கிராமப்புற இளைஞர்களில் சுமார் 50% பேர் எந்தவொரு அமைப்புசார் துறையிலும் வேலையின்றி உள்ளனர். மேலும் அவர்கள் வேலையின்றியோ அல்லது தகுதிக்கு குறைந்த வேலையிலோ உள்ளனர்.
2030 ஆம் ஆண்டின் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான பாதைக்கு உலகம் இன்னும் தயாராகவில்லை.
2018 ஆம் ஆண்டில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியமாக தெற்காசியா உள்ளது.
இந்தப் பிராந்தியத்தின் 70 சதவீத கிராமப்புற மக்கள் தொகைக்கு இந்தியா தாயகமாக உள்ளது.