உலகளாவிய உணவுக் கொள்கை அறிக்கை 2024: ஆரோக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான உணவு முறைகள் என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையானது சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தினால் (IFPRI) வெளியிடப் பட்டு உள்ளது.
தவறான உணவு முறையின் விளைவாக, இந்தியாவின் மக்கள் தொகையில் 16.6 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில், 2011 ஆம் ஆண்டில் சுமார் 15.4% ஆக இருந்த ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகை விகிதம் ஆனது 2021 ஆம் ஆண்டிற்குள் 16.6% ஆக அதிகரித்துள்ளது.
இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 38 சதவீதம் பேர் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டுள்ளனர் என்ற அதே சமயம் 28 சதவீதம் பேர் மட்டுமே பரிந்துரைக்கப் பட்ட ஐந்து உணவு வகைகளையும் உட்கொண்டுள்ளனர்.
2006 ஆம் ஆண்டில் 12.9% ஆக இருந்த, வயது வந்தோர்களில் பதிவான அதிக உடல் எடை பாதிப்பு ஆனது 2016 ஆம் ஆண்டில் 16.4% ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளில் அதிக எடை, உடல் பருமன் மற்றும் அது தொடர்புடைய தொற்றா நோய்களின் பரவல் அதிகரித்துள்ளது.
இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்கள், அதிலும் மிக அதிகமாக ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.