சமீபத்தில் நிறைவடைந்த ஐக்கிய நாடுகள் சபையின் ‘எதிர்காலத்திற்கான உச்சி மாநாட்டில்’ ‘உலகளாவிய எண்ணிம ஒப்பந்தம்’ (GDC) ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இது ஒரு கட்டாயமான பிணைப்புச் சட்டம் இல்லையென்றாலும் அரசாங்கங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய பகிரப்பட்ட இலக்குகளின் தொகுப்பைக் கொண்ட ஒரு உத்திசார் செயற்கருவியாகும்.
GDC என்பது நிலையான மேம்பாட்டினை முன்னேற்றும் வழிகளில் பல்வேறு தொழில் நுட்பங்களை அணுக வேண்டியது குறித்த மனிதக் கண்ணோட்டத்தினை உறுதி செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டுத் திட்டமாகும்.
எண்ணிம இடைவெளியினை நிவர்த்தி செய்வதற்காக, அனைவரும் அணுகும் வகையிலான மென்பொருள், அனைவரும் அணுகும் வகையிலான தரவு மற்றும் அனைவரும் அணுகும் வகையிலான செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மற்றும் தனி உரிமை மற்றும் சிறந்த நடைமுறைகளை கடைபிடிப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய "எண்ணிமப் பொதுச் சொத்துகளை" GDC முன்மொழிகிறது.
முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபையானது இரண்டு ஒப்பந்தங்களை சோதனை முறையில் நடைமுறைப்படுத்தவும் சட்டப் பூர்வமாக்கவும் உதவியது.