TNPSC Thervupettagam

உலகளாவிய எரிசக்தி மதிப்பாய்வு 2025

March 30 , 2025 2 days 30 0
  • 2025 ஆம் ஆண்டு உலகளாவிய எரிசக்தி மதிப்பாய்வு 2025 என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையானது சர்வதேச எரிசக்தி முகமையினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • உலகளாவிய மின்சாரத் தேவையானது 2024 ஆம் ஆண்டில் 4.3 சதவீதம் அதிகரித்து உள்ளதோடு இது 2023 ஆம் ஆண்டில் பதிவான 2.5 சதவீதத் தேவை அதிகரிப்பினை விட அதிகமாகும்.
  • 2024 ஆம் ஆண்டில் பதிவான தீவிர வெப்பநிலையானது இது வரை பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான ஆண்டு ஆக, 2023 ஆம் ஆண்டில் பதிவான முந்தைய அதிக வெப்ப நிலையை விஞ்சியது.
  • உலகளாவிய அளவில் கட்டிட மின்சார நுகர்வானது, 2024 ஆம் ஆண்டில் 600 டெராவாட் மணி நேரங்களுக்கு மேல் (TWh) அல்லது ஐந்து சதவீதம் அதிகரித்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் மின்சாரத் தேவையில் ஏற்பட்ட ஒரு மொத்த அதிகரிப்பில் தொழில் துறையானது சுமார் 40 சதவீத பங்கினை எட்டியது.
  • 2024 ஆம் ஆண்டில் தொழில்துறையின் மின்சாரப் பயன்பாடு என்பது சுமார் 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில், உலகளாவிய மின்சார உற்பத்தியில் பதிவான 80 சதவீத வளர்ச்சி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் மற்றும் அணுசக்தி மூலம் உற்பத்தி செய்யப் பட்டது.
  • 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய நிலக்கரிவழி உமிழ்வு ஆனது சுமார் 0.9 சதவீதம் (135 மெட்ரிக் டன் CO2) அதிகரித்துள்ளது.
  • உலகளாவிய நிலக்கரிப் பயன்பாட்டில் 58 சதவீதப் பங்குடன், உலகளவில் மிகப்பெரிய நிலக்கரி நுகர்வு நாடாக சீனா தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்