இது மெக்கென்சி & கம்பனி என்ற மேலாண்மை ஆலோசனை வழங்கீட்டு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் கீழான ஐந்து தூண்கள்: வர்த்தகம் மற்றும் மூலதனம்; புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம்; பருவநிலை மற்றும் இயற்கை மூலதனம்; சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்; மற்றும் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியனவாகும்.
2019 ஆம் ஆண்டில் 72.8 ஆக இருந்த உலகில் பிறப்பின் போதான வாழ்நாள் எதிர்பார்ப்பு ஆனது, 2021 ஆம் ஆண்டில் 71 ஆகக் குறைந்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் உலகளவில் 241 மில்லியன் மலேரியா பாதிப்புகள் மற்றும் 627,000 மலேரியாவினால் ஏற்படும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அதாவது 2019 ஆம் ஆண்டை விட 14 மில்லியன் மக்கள் அதிகமாக மலேரியாவால் பாதிக்கப் பட்டுள்ளனர் மற்றும் 69,000 பேர் மலேரியா பாதிப்பினால் உயிரிழந்து உள்ளனர்.
முப்பது ஆண்டுகளில் முதல் முறையாக பேறுகால இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் 100,000 பிறப்புகளுக்கு 151 இறப்புகளாக இருந்த உலகளாவிய பேறுகால இறப்பு விகிதம் ஆனது 2020 ஆம் ஆண்டில் 100,000 பிறப்புகளுக்கு 152 இறப்புகளாக இருந்தது.
2020 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 287,000 பேறுகால இறப்புகளில், 70 சதவீதம் (202,000) ஆனது ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில் பதிவாகியுள்ளன.