மீண்டும் ஒருமுறை நெதர்லாந்தின் ஓய்வூதிய வருமான முறையானது உலகளாவிய ஓய்வூதியக் குறியீட்டில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
இத்தரவரிசையில் ஐஸ்லாந்து மற்றும் டென்மார்க் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன.
அர்ஜென்டினாவின் தரவரிசையானது மிகக்குறைந்த குறியீட்டு மதிப்பைக் கொண்டி இருக்கிறது.
இந்தியாவின் தரவரிசையானது 2022 ஆம் ஆண்டில் 44.5 இல் இருந்து 45.9 ஆக ஒட்டு மொத்தக் குறியீட்டு மதிப்பைக் கொண்டிருந்ததோடு, 47 நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் 45வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
போதுமான அளவு, நிலைத்தன்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றின் துணைக் குறியீடுகளின் அளவிடப்பட்ட சராசரிகளிலிருந்து இக்குறியீட்டு மதிப்புகள் பெறப் படுகிறது.