TNPSC Thervupettagam

உலகளாவிய ஓய்வூதியக் குறியீட்டுக் கணக்கெடுப்பு

October 26 , 2022 762 days 361 0
  • மெர்சர் CFA என்ற நிறுவனமானது 2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஓய்வூதியக் குறியீட்டுக் கணக்கெடுப்பினைச் சமீபத்தில் வெளியிட்டது.
  • உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள ஓய்வூதிய முறைகளை இந்தக் குறியீடு மதிப்பிடுகிறது.
  • ஐஸ்லாந்து முதலிடத்திலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் முறையே நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் உள்ளன.
  • இந்தக் குறியீட்டில் தாய்லாந்து மிக மோசமான செயல்திறன் கொண்ட நாடாக இடம் பெற்றுள்ளது.
  • இந்தப் பட்டியலில் இடம் பெற்ற 44 நாடுகளில் இந்தியா 41வது இடத்தில் உள்ளது.
  • முந்தைய ஆண்டின் குறியீட்டில், இடம் பெற்ற 43 நாடுகளில் இந்தியா 40வது இடத்தைப் பிடித்தது.
  • 2021 ஆம் ஆண்டில் 43.3 ஆக இருந்த ஒட்டு மொத்தக் குறியீட்டு மதிப்பானது, 2022 ஆம் ஆண்டில் 44.4 ஆக  அதிகரித்ததுடன் இந்தியா ஒரு சிறிய முன்னேற்றத்தைக் கண்டது.
  • இருப்பினும், இந்த மதிப்பெண் 2020 ஆம் ஆண்டில் 45.7 என்ற மதிப்பை விட குறைவாக உள்ளது.
  • நிறைவு, நிலைத்தன்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகிய மூன்று துணைக் குறியீடுகளில் இந்தியாவின் மதிப்பெண்கள் முறையே 33.5, 41.8 மற்றும் 61.0 ஆகும்.
  • இருப்பினும், "நிலைத்தன்மை" மற்றும் "ஒருமைப்பாடு" ஆகியவற்றில் இந்தியாவின் மதிப்பெண்கள் குறைந்துள்ளன.
  • நிறைவு மற்றும் நிலைத்தன்மை ஆகிய துணைக் குறியீடுகளை அதிகரிக்க தனியார் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பரவலை விரிவுபடுத்தச் செய்வதற்கு இந்த அறிக்கை பரிந்துரைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்