இலண்டனில் நடைபெற்ற கடல் சார் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் 83வது அமர்வின் போது "2050 ஆண்டில் நிகரச் சுழிய உமிழ்வு நிலையினை அடைவதற்கான சர்வதேச கடல் சார் அமைப்பின் கட்டமைப்பிற்கு" ஒப்புதல் அளித்துள்ளது.
இது ஒட்டு மொத்தக் கப்பல் போக்குவரத்துத் துறையிலும் உள்ள பசுமை இல்ல வாயு உமிழ்வு மதிப்பு நிர்ணயத்துடன் சேர்த்து, கட்டாய உமிழ்வு வரம்புகளை மிகவும் நன்கு ஒருங்கிணைக்கிறது.
இந்தப் புதிய கார்பன் வரியானது 2030 ஆம் ஆண்டில், சுமார் 30-40 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதோடு இது ஆண்டிற்கு சுமார் 10 பில்லியன் டாலர் ஆகும்.
இந்தக் கட்டமைப்பு ஆனது, 2040 ஆம் ஆண்டிற்குள் 60% உமிழ்வு குறைப்பை அடைய உதவும் ஆனால் 2050 ஆம் ஆண்டிற்குள் வாக்குறுதியளிக்கப் பட்டப் படி நிகரச் சுழிய உமிழ்வு நிலையை எட்டாது.
இந்தக் கொள்கையானது இந்தியா, பிரேசில் மற்றும் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென்னாப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 63 நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா மற்றும் வெனிசுலா போன்ற சில பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தன.