உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது அதன் 2024 ஆம் ஆண்டு உலகளாவிய காச நோய் (TB) அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் காசநோயால் பாதிக்கப்பட்ட 10.84 மில்லியன் மக்களில், சுமார் 8.16 மில்லியன் பேர் மட்டுமே கண்டறியப் பட்டு பதிவு செய்யப்பட்டனர் என்பதோடு இது 2.7 மில்லியன் பாதிப்பு இடைவெளிக்கு வழிவகுத்தது.
1995 ஆம் ஆண்டில் WHO அமைப்பானது உலகளாவியக் காசநோய் கண்காணிப்பைத் தொடங்கியதிலிருந்து பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
இவ்வாறு, 2023 ஆம் ஆண்டில் காசநோய் பாதிப்பானது கோவிட்-19 பெருந்தொற்றினை விஞ்சி மீண்டும் முதன்மையான தொற்று மிக்க உயிர்க் கொல்லியாக மாறியது.
காசநோய் தடுப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதிக் கட்டமைப்பில் மிகப் பெரிய நிதி இடைவெளி உள்ளது என்பதோடு 2023 ஆம் ஆண்டில் 22 பில்லியன் டாலர் ஆகிய நிர்ணயிக்கப்பட்ட நிதி இலக்கில் 5.7 பில்லியன் டாலர் மட்டுமே கிடைக்கப்பெற்றது.
உலகளவில், 2020 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் காசநோய்ப் பாதிப்பு 4.6% அதிகரித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டிற்கு சுமார் 2% என்ற வீதத்தில் பதிவாகி வந்த சரிவு இதனால் தலைகீழாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 28 லட்சம் காசநோய் பாதிப்புகள் இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது என்ற நிலையில் இது உலகளாவியப் பாதிப்புகளில் 26% ஆகும்.
3.15 லட்சம் காசநோய் தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ள நிலையில் இது உலகளாவிய உயிரிழப்புகளில் 29% ஆகும்.