TNPSC Thervupettagam

உலகளாவிய கார்பன் அளவுநிலை (பட்ஜெட்) 2019

December 6 , 2019 1689 days 677 0
  • உலகளாவிய கார்பன் திட்டமானது (Global Carbon Project - GCP) 2019 ஆம் ஆண்டிற்கான ‘உலகளாவிய கார்பன் அளவுநிலை’ (பட்ஜெட்) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட GCP ஆனது அதிக அளவில் உள்ள 3 பசுமை இல்ல வாயுக்களுக்கான உலகளாவிய அளவு நிலைகளை வெளியிடும் ஒரு அமைப்பாகும். அவையாவன
    • கார்பன் டை ஆக்சைடு
    • மீத்தேன்
    • நைட்ரஸ் ஆக்சைடு
  • 2019 ஆம் ஆண்டில் வளிமண்டல CO2ன் செறிவானது தொழில்துறைப் புரட்சிக்கு முந்தைய நிலைகளை விட 47% அதிகமாக இருக்கின்றது.
  • புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் தொழில் துறையிலிருந்து உலகளாவிய CO2 உமிழ்வுகள் 1960 ஆம் ஆண்டுகளில் இருந்து ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறையும் அதிகரித்து வருகின்றது.
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் உமிழ்வானது (2.6 பில்லியன் டன் அல்லது ஜிகாடன்கள்) 2018 ஆம் ஆண்டில் இருந்ததை விட 1.8 சதவீதம் மட்டுமே அதிகமாக இருக்கும்.
  • உமிழ்வு வீதங்களின் மெதுவான அதிகரிப்பானது பொருளாதாரத்தின் மிகவும் மெதுவான வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்