புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வெளிவரும் உலகளாவிய கார்பன் உமிழ்வு ஆனது எப்போதும் இல்லாத உச்ச அளவினை எட்டியுள்ளது.
2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் எண்ணெய்ப் பயன்பாட்டிலிருந்து வெளியான உலகளாவிய உமிழ்வு ஆனது மிகவும் அதிகளவில் உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் 36.8 பில்லியன் டன்கள் புதைபடிவ கார்பன் டை ஆக்சைடு (CO2) உமிழ்வு பதிவாகியுள்ளதாகவும், இது 2022 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 1.1 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த வருடாந்திர அறிக்கை குறிப்பிடுகிறது.
"நிலக்கரி (1.1 சதவிகிதம்), எண்ணெய் (1.5 சதவிகிதம்) மற்றும் எரிவாயு (0.5 சதவிகிதம்) ஆகியவற்றில் இருந்து வெளிவரும் உலகளாவிய உமிழ்வுகள் அனைத்தும் அதிகரிக்கும்" என்று அறிக்கை கூறியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் (2022 ஆம் ஆண்டை விட) இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் உமிழ்வு அதிகரிப்பானது எட்டு சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் 8.2 சதவீதமும், சீனாவில் 4.0 சதவீதமும் உமிழ்வு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டது.
அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் 7.4 சதவீதமும், அமெரிக்காவில் 3.0 சதவீதமும் உலகின் பிற பகுதிகளில் 0.4 சதவீதமும் சரிவானது பதிவானது.