TNPSC Thervupettagam

உலகளாவிய கார்பன் வெளியீடு

March 24 , 2018 2309 days 719 0
  • சர்வதேச ஆற்றல் நிறுவனத்தின் கருத்துப்படி, உலகளவில் ஆற்றல் தொடர்பான CO2 வெளியீடுகள்5 கிகா (Giga) டன்கள் என்ற அளவிற்கு 2017ல் அதிகரித்துள்ளது.
  • மூன்று ஆண்டுகளிலில்லாத அளவிற்கு உலகளவில் ஆற்றல் தொடர்பான CO2 வெளியீடுகள் அதிகரித்துள்ளன. அதிகப்படியான ஆற்றல் தேவை மற்றும் ஆற்றல் திறன் மேம்பாட்டுக் குறைபாடு ஆகியவை இந்த அதிகரிப்பிற்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
  • சர்வதேச ஆற்றல் நிறுவனத்தின் முதல்நிலை தரவுகளின்படி உலக ஆற்றல் தேவை கடந்த ஆண்டு1% ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு 14050 மில்லியன் டன்கள் எண்ணெய்க்குச் சமம். இது கடந்த ஆண்டின் விகிதத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகமானது ஆகும். வலுவான பொருளாதார வளர்ச்சியால் இது அதிகரித்துள்ளது.

சர்வதேசஆற்றல் நிறுவனம்

  • சர்வதேச ஆற்றல் நிறுவனமானது பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (Organization for Economic Cooperation and Development - OECD) கட்டமைப்பின் படி, 1974ல் நிறுவப்பட்ட அரசுகளுக்கிடையேயான நிறுவனமாகும்.
  • தற்போது, இந்தியாவையும் சேர்த்து 30 உறுப்பினர் நாடுகள் உள்ளன. இதன் தலைமையகம் பிரான்சின் பாரீஸில் உள்ளது.
  • சர்வதேச ஆற்றல் நிறுவனம் 1973-ன் எண்ணெய் நெருக்கடியைத் தொடர்ந்து நிறுவப்பட்டது.
  • சர்வதேச ஆற்றல் நிறுவனம் 29 உறுப்பினர் நாடுகளுக்கும், சீனா & ரஷ்யா போன்ற உறுப்பினரல்லாத நாடுகளுக்கும் ஆற்றல் கொள்கை ஆலோசகராக செயல்படுகிறது.
  • இது மூன்று முக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. பயனுள்ள ஆற்றல் கொள்கை ; ஆற்றல் பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு. (“3Es” - Effectual energy policy; Energy security; Economic development and environmental protection).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்