சர்வதேச ஆற்றல் நிறுவனத்தின் கருத்துப்படி, உலகளவில் ஆற்றல் தொடர்பான CO2 வெளியீடுகள்5 கிகா (Giga) டன்கள் என்ற அளவிற்கு 2017ல் அதிகரித்துள்ளது.
மூன்று ஆண்டுகளிலில்லாத அளவிற்கு உலகளவில் ஆற்றல் தொடர்பான CO2 வெளியீடுகள் அதிகரித்துள்ளன. அதிகப்படியான ஆற்றல் தேவை மற்றும் ஆற்றல் திறன் மேம்பாட்டுக் குறைபாடு ஆகியவை இந்த அதிகரிப்பிற்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
சர்வதேச ஆற்றல் நிறுவனத்தின் முதல்நிலை தரவுகளின்படி உலக ஆற்றல் தேவை கடந்த ஆண்டு1% ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு 14050 மில்லியன் டன்கள் எண்ணெய்க்குச் சமம். இது கடந்த ஆண்டின் விகிதத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகமானது ஆகும். வலுவான பொருளாதார வளர்ச்சியால் இது அதிகரித்துள்ளது.
சர்வதேசஆற்றல் நிறுவனம்
சர்வதேச ஆற்றல் நிறுவனமானது பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (Organization for Economic Cooperation and Development - OECD) கட்டமைப்பின் படி, 1974ல் நிறுவப்பட்ட அரசுகளுக்கிடையேயான நிறுவனமாகும்.
தற்போது, இந்தியாவையும் சேர்த்து 30 உறுப்பினர் நாடுகள் உள்ளன. இதன் தலைமையகம் பிரான்சின் பாரீஸில் உள்ளது.
சர்வதேச ஆற்றல் நிறுவனம் 1973-ன் எண்ணெய் நெருக்கடியைத் தொடர்ந்து நிறுவப்பட்டது.
சர்வதேச ஆற்றல் நிறுவனம் 29 உறுப்பினர் நாடுகளுக்கும், சீனா & ரஷ்யா போன்ற உறுப்பினரல்லாத நாடுகளுக்கும் ஆற்றல் கொள்கை ஆலோசகராக செயல்படுகிறது.
இது மூன்று முக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. பயனுள்ள ஆற்றல் கொள்கை ; ஆற்றல் பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு. (“3Es” - Effectual energy policy; Energy security; Economic development and environmental protection).