TNPSC Thervupettagam

உலகளாவிய காலநிலை 2011-2020: ஒரு தசாப்த முடுக்கம்

December 8 , 2023 224 days 170 0
  • உலக வானிலை அமைப்பானது (WMO) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 2011-2020 தசாப்த காலமானது நிலம் மற்றும் கடல் ஆகிய இரண்டிற்கும் மிகவும் வெப்பமான காலமாக பதிவு செய்யப்பட்டு வெளிப்பட்டது.
  • உலகளாவியச் சராசரி வெப்பநிலை என்பது 1850-1900 காலச் சராசரியை விட 1.10 ± 0.12 °C அளவிற்கு உயர்ந்தது.
  • 2016 ஆம் ஆண்டு (எல் நினோ நிகழ்வின் காரணமாக) மற்றும் 2020 ஆம் ஆண்டு ஆகியவை வெப்பமான ஆண்டுகளாக தனித்து நிற்கின்றன.
  • CO2 (கரிம வாயு) உமிழ்வு 2020 ஆம் ஆண்டு 413.2 ppm (ஒரு மில்லியனிற்கு எவ்வளவு துகள்) என்ற அளவினை எட்டியது.
  • கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக் பனிக்கட்டிகள் 2001-2010 கால அளவுடன் ஒப்பிடும் போது 38% அளவிற்கு அதிகப் பனி அளவினை இழந்துள்ளன.
  • அண்டார்டிக் ஓசோன் துளையானது 2011-2020 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் குறைந்து விட்டதால் அது மாண்ட்ரீயல் நெறிமுறையின் கீழ் வெற்றிகரமான சர்வதேச நடவடிக்கைக்களுக்கான வரவாக வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்