உலகளாவிய காலநிலை அபாயக் குறியீடு - இந்தியா 5வது இடம்
December 7 , 2019 1818 days 768 0
சுற்றுச்சூழல் சார்ந்த கொள்கை வகுக்கும் குழுவான “ஜெர்மன்வாட்ச்” என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
2020 ஆம் ஆண்டின் காலநிலை அபாயக் குறியீட்டில், இந்தியாவின் தரவரிசையானது 2017 ஆம் ஆண்டில் 14வது இடத்திலிருந்து 2018 ஆம் ஆண்டில் 5வது இடத்திற்குச் சென்றுள்ளது.
காலநிலை மாற்றத்தால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளையும் இந்தியா பதிவு செய்துள்ளது.
மேலும் 2018 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இரண்டாவது அதிகபட்ச நிதி இழப்புகளையும் இந்தியா சந்தித்துள்ளது.
ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை 2018 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மூன்று நாடுகளாகும்.
ஜெர்மனியில் உள்ள “ஜெர்மன்வாட்ச்” என்பது நீடித்த உலகளாவிய வளர்ச்சிக்குப் பணியாற்றும் ஒரு சுயாதீனமான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பாகும்.