ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பானது தனது “உலகளாவிய காலநிலை வழக்குகள் அறிக்கை 2021” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றச் சட்டத்திற்கான சபின் மையத்தின் ஒத்துழைப்புடன் இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் காலநிலை சார்ந்த வழக்குகள் அதிகரித்துள்ளன என்று இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
முக்கிய கண்டுபிடிப்புகள்
கடந்த மூன்று ஆண்டுகளில் காலநிலை வழக்குகள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளன.
இந்த அறிக்கை வழங்கிய தரவுகளின்படி, 2017 ஆம் ஆண்டில் 24 நாடுகளில் 884 வழக்குகள் பதிவாகியுள்ளன.
2020 ஆம் ஆண்டின் நிலவரப்படி, 38 நாடுகளிலும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் 1,550 ஆக அதிகரித்துள்ளன.