ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை செயலகமானது ஒரு தொகுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தத் தொகுப்பு அறிக்கை ஆனது ' உலகளாவிய காலமுறை மறுமதிப்பீடு' எனப்படும் ஒரு மாபெரும் நடவடிக்கையுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
இது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டில், பாரிசு நகரில் நடைபெற்ற மாநாட்டில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவியின் வெப்பநிலையானது 2 டிகிரி செல்சியஸுக்கு அப்பால் உயராமல் இருக்கவும், "முடிந்தவரையில்" சுமார் 1.5 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாகவும் வைத்திருப்பதற்கான உறுதிப்பாட்டினை உலக நாடுகள் மேற்கொண்டன.
பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் அவற்றின் புதைபடிவ எரிபொருள் சார்ந்த ஆற்றல் அமைப்புகளைப் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களுக்கு மாற்றுவதில் தனிப்பட்ட நாடுகளால் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யவும் அல்லது மறுமதிப்பீடு செய்யவும் அந்நாடுகள் ஒப்புக்கொண்டன.
பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை அடைவதற்கான பாதையில் உலக நாடுகள் செயல்பட வில்லை என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
166 நாடுகளின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகள் பரிசீலனை செய்யப் பட்டு, பாரீஸ் ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்ட இலக்குகளை அடைய அவை போதுமானதாக இல்லை என்ற கூறப்பட்டது.
2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வினை 43% குறைப்பதற்கு அதிக லட்சியப் போக்கு மிக்க நடவடிக்கை தேவைப்படுகிறது.
மேலும் 2035 ஆம் ஆண்டிற்குள் 60% குறைப்பதற்கும் மற்றும் 2050 ஆம் ஆண்டில் உலகளவில் நிகர சுழி அளவிலான CO2 உமிழ்வை எட்டவும் அதிக லட்சியப் போக்கு மிக்க நடவடிக்கை தேவைப்படுகிறது.
2030 ஆம் ஆண்டிற்கு முந்தையக் காலகட்டத்தில் வளர்ந்து வரும் நாடுகள் இந்த இலக்கை அடைய 5.8-5.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது.
மேலும், 2050 ஆம் ஆண்டில் நிகர சுழி உமிழ்வு நிலையை அடைவதற்காக 2030 ஆம் ஆண்டிற்குள் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களை நிறுவ ஆண்டிற்கு 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என இந்த அறிக்கை கூறுகிறது.