TNPSC Thervupettagam

உலகளாவிய குளிர்காய்ச்சல் (இன்புளுயன்ஸா) வியூகம் 2019-2030

March 25 , 2019 1978 days 549 0
  • உலக சுகாதார மையமானது அனைத்து நாடுகளிலும் உள்ள மக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு 2019-2030 காலத்திற்கான உலகளாவிய இன்புளூயன்ஸா வியூகத்தினை வெளியிட்டுள்ளது.
  • பருவகால காய்ச்சலைத் தடுத்தல், விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அடுத்த இன்புளுயன்ஸா பரவல்களை தடுக்க தயாரிப்புப் பணிகள் செய்தல் ஆகியவை இதன் குறிக்கோள்கள் ஆகும்.
  • இந்த புதிய வியூகமானது இன்புளுயன்ஸாவிற்காக இதற்கு முன்னர் உருவாக்கப்பட்டதை விட மிகவும் விரிவான மற்றும் தொலைநோக்கு உடைய ஒரு வியூகம் ஆகும்.
இதன் இரண்டு முக்கிய இலக்குகள்
  • நாட்டில் நோய் கண்காணிப்பு மற்றும் பதில் எதிர்ப்பு, தடுப்பு & கட்டுப்பாடு மற்றும் ஆயத்த பணிகளுக்கான வலுவான திறன்களை உருவாக்குதல்.
    • இதனை அடைவதற்கு, தேசிய & உலகளாவிய தயார்நிலை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட இன்புளுயன்ஸாத் திட்டத்தினை உருவாக்க வேண்டும் என ஒவ்வொரு நாட்டிற்கும் இது அழைப்பு விடுத்துள்ளது.
  • அனைத்து நாடுகளுக்கும் அணுகக் கூடிய அளவில் தடுப்பு, கண்டறிதல், கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளித்தல் ஆகியவற்றிற்கான அதிக திறன் வாய்ந்த தடுப்பூசிகள், எதிர் வைரல்கள் மற்றும் சிகிச்சை முறை போன்ற சிறந்த கருவிகளை உருவாக்குதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்